fbpx
Others

நீடாமங்கலம் –மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு.

சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கைகள் தாக்கல் செய்த மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுநீடாமங்கலம் ஏப்ரல் 19
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வேளாண் கல்லூரி, தோட்டக்கலை கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கங்கள் நடத்தி சுற்றுச்சூழல் மேம்படுத்தும் விதமான நீர் மேலாண்மை திடக்கழிவு மேலாண்மை காற்று மாசுபாட்டை குறைத்தல் நெகிழிக்கு மாற்று மறுசுழற்சி அவசியம் புதுப்பிக்கத்தக்க வளங்கள் பூச்சிக்கொல்லிகள் தாக்கங்களை நிவர்த்தி செய்தல் , மாடித்தோட்டம் அமைத்தல் போன்ற பயிற்சிகளை வழங்கி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பயிற்றுனர்களை அழைத்து பயிற்சி அளித்து பயிற்சியில் பெற்ற விளக்கங்களை பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து மற்ற முக்கிய விவரங்களை ஆய்வுக் கட்டுரைகளாக சமர்ப்பிக்க கூறி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடத்தி வருகின்றனர் . அரசு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருச்சி மாணவர்கள் நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்க கருத்தரங்கில் பங்கு பெற்று ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்தனர் இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை தலைவர் பத்மஸ்ரீ ராமன் செயலாளர் ஜெகதீஷ் பாபு ஆகியோர் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close