GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
மதுரையில் கொரோனா பாதிப்புள்ளவர்கள் வீடுகளில் தனிமை…! மாநகராட்சி யோசனை!
Home quarantine may soon in Madurai

மதுரை:
மதுரையில் கொரோனா மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை உயர்வதால், படுக்கை வசதிகள் கிடைப்பது இல்லை என்று சர்ச்சைகள் எழுகின்றன.
இந் நிலையில் சென்னை போன்று கொரோனா அறிகுறியில்லாத, லேசான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் மதுரையில் தயாராகி உள்ளது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
தனிமைப்படுத்தப்பட்டோர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீடுகளிலேயே இருப்பர். வீட்டுத்தனிமையை முறையாக கடைபிடிப்பேன் என்ற உத்தரவாதம் அளித்து அதற்கான உறுதிமொழி பத்திரத்தில் நோயாளிகள் கையெழுத்திட வேண்டும். அதன்பிறகே அவர்கள் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
















