fbpx
RETechnology

எல்ஜி வெல்வெட்(LG Velvet) ஸ்மார்ட்போன் அறிமுகம்!

எல்ஜி நிறுவனத்தாரின் புதிய அட்டகாசமான வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போனின்  விலை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய சந்தையில் அறிமுகமாக இருக்கும் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்  மே 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.

மே 8 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் என்றும் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

LG Velvet சிறப்பம்சங்கள் என்ன?

– 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளே  வுடன் வருகிறது.
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி ஆக்டாகோர் பிராசஸர் கொடுத்துள்ளார்கள்.
– அட்ரினோ 620 GPU இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
– 8 ஜிபி ரேம்  உடன் வருகிறது.
– 128 ஜிபி மெமரி உள்ளது.
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி யும் உள்ளது.
– 48 எம்பி பிரைமரி கேமரா கொடுத்துள்ளார்கள்.
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வும்,
– 5 எம்பி டெப்த் சென்சார்- ம் கொடுத்துள்ளார்கள்.
– ஆண்ட்ராய்டு 10  இயங்குதளம்.
– டூயல் சிம் ,வசதி,
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக் –உம் உள்ளது.
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை  உள்ளது.
– யுஎஸ்பி டைப்-சி
– 4300 எம்ஏஹெச் பேட்டரி யுடன் – ஃபாஸ்ட் சார்ஜிங்  வசதி.

விலை தகவல் என்ன?

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அரோரா வைட், அரோரா கிரே, அரோரா கிரீன் மற்றும் இல்யூஷன் சன்செட்  ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

தென் கொரியாவில் இதன் விலை தோராயாமாக 899,800 வொன், இந்திய மதிப்பில் ரூ. 55,780 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை தகவல் எதுவும் இல்லை.

Related Articles

Back to top button
Close
Close