RETamil Newsஉலகம்
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளியாக பதிவு !
இந்தோனேஷியாவில் உள்ள லோம்போக் தீவை இன்று ( ஞாயயிற்று கிழமை ) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு 7 புள்ளிகலாக பதிவாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சில மணி நேரத்திற்கு பிறகுதான் இந்த எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.
பூமியின் மேற்பரப்பிற்கு கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் , இந்த தீவின் வடக்கு கடலோர பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் அமைப்பு கூறியுள்ளது.
கடலோர மக்களை கடலில் இருந்து விலகி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தால் எவரேனும் இறந்திருக்கிறார்களா என்பது பற்றி தகவல்கள் வெளியாகவில்லை.