fbpx
RETamil Newsஉலகம்

இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்;

முன்தினம் இரவு இந்தோனேஷிய லாம்போக் தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இரண்டு முறை உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7 புள்ளிளாக பதிவானதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.. பின் இரண்டு மணி நேரத்தில் அந்த சுனாமி எச்சரிக்கை திரும்பபெறப்பட்டது.

இந்தோனேஷிய லாம்போக் தீவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 80% வீடுகள் சேதமடைந்து இருப்பதாகவும், ஆயிரத்திக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தும் உள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனினும் அங்கு அடிக்கடி நிலஅதிர்வுகள் ஏற்படுவதால், ஆயிரத்திக்கும் மேற்பட்ட பொது மக்கள் வீதிகளிலும் , சாலையோரத்திலும் முகாமிட்டுள்ளனர்.

 

இந்தோனேஷிய மீட்பு பணியினர் இரவு , பகலாக மீட்பு பணியில் உள்ளனர். இதுவரை 145 பேர் இறந்துள்ளதாகவும், நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுவரை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் , தொலைதொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாலங்களும் இடிந்துள்ளதால் போக்குவரத்தும் முடங்கி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close