fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

1.65 லட்சம் கொரோனா நோயாளிகள்…! இந்தியாவின் தற்போதைய நிலை இதுதான்…!

India corona status

டெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 31ம் தேதியுடன் 4வது கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ளது.

இந் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,706 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106 ஆக உயர்ந்துள்ளது.

மாநில வரிசையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,982 பேர் பலியான நிலையில் 18,616 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 19,372 பாதிப்புகளுடன் 2ம் இடத்தை அடைந்துள்ளது.

குஜராத்தில் 15,562 பேரும், டெல்லியில் 16,281 பேரும், ராஜஸ்தானில் 8,067 பேரும், மத்திய பிரதேசத்தில் 7,453 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,170 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close