இந்தியாவில் 56,342 பேருக்கு கொரோனா…! மத்திய அரசு தகவல்
India corona case details
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952லிருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இன்று காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952லிருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,783லிருந்து 1,886 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15,267லிருந்து 16,540 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 17,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 7,012, டெல்லியில் 5,980, தமிழகத்தில் 5,409, ராஜஸ்தானில் 3,427, மத்திய பிரதேசத்தில் 3,252, உத்தரப்பிரதேசத்தில் 3,071 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் 1,847, தெலுங்கானாவில் 1,123, கர்நாடகாவில் 705, கேரளாவில் 503, புதுச்சேரியில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.