திடீர் திருப்பம் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு….காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!!!

கர்நாடகத்தில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க கேட்டுக்கொண்டுள்ளது. அதையடுத்து நள்ளிரவில் இதை விசாரிப்பது குறித்து ஆராயப்படுகிறது.
பெரும்பான்மை உறுப்பினர் பலம் உள்ள தங்களை விட்டுவிட்டு,எடியூரப்பாவின் தலைமையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்கும்படி, ஆளுநர் வாஜூபாய் வாலா இன்று இரவு அழைப்பு விடுத்தார். அதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாளை காலையில் எடியூரப்பா பதவியேற்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சிறிது நேரத்தில் தனது முடிவை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது