Others
முதல்வர்விஜய் டெல்லியில் இரு நாள்கள் முகாம்…
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில்உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அரசினர் இல்லத்தில் ஓய்வு எடுக்கும்..முதலமைச்சர் விஜய், மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார். பிரதமர் மோடியின் அலுவலகமான சேவா தீர்த் பவனில் இந்த சந்திப்பானது நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி விவகாரங்கள்…உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து, மாலை 6.45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இரவு 7.30 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைமுதலமைச்சர் விஜய் சந்திக்கிறார்.இதையடுத்து நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தியையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.
.