fbpx
Others

பாடியநல்லூர்- உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த. வெ. க சார்பில் 1001 பேருக்கு சமபந்தி விருந்து …!

பாடியநல்லூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டுத. வெ. க சார்பில்
1001 பேருக்கு சமபந்தி விருந்து!    மாதவரம் எம். எல். ஏ. விஜய் பிரபு வழங்கினார்!!

தமிழக வெற்றி கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் ஆலோசனைப்படி, மாநில கழக பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், உறுப்பினர் சேர்க்கை அணி மாநில துணை செயலாளரும், மாதவரம் சட்ட மன்ற உறுப்பினருமான எம்.எல். விஜய் பிரபு தலைமையிலும் மாவட்டப் பொருளாளர் டி.சி.எம். மனோஜ் ஏற்பாட்டில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 1001 நபருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வர் அங்காள ஈஸ்வரி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.மகளிர் அணி அமைப்பாளர் ஷாலினி, பாடியநல்லூர் பேரூராட்சி செயலாளர். முத்துக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் செல்வக்குமார், முகிலன், என். எஸ். மைக்கேல், மணிமாறன், செங்குன்றம் நகரச் செயலாளர். விஜி உள்ளிட்ட த.வெ க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.அரசு போக்குவரத்து கழக மூத்த ஊழியர். கண்ணன் எம். எல்.ஏ.வுக்கு ஆளுயர மாலை அணிவித்து ஸ்ரீ அங்காள ஈஸ்வரி திருவுருவ படத்தை வழங்கினார்.முன்னதாக அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வர் அங்காள ஈஸ்வரி கோயிலில் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல். விஜய் பிரவுக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


Related Articles

Back to top button
Close
Close