RETamil Newsஅரசியல்இந்தியா
சிகிச்சைக்காக பெங்களூரு வந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!!
பெங்களூரு : துணை நிலை கவர்னர் இல்லத்தில் உள்ளிருப்பு பேராட்டம் நடத்தியதால் உடல் சுகவீனம் அடைந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சிகிச்சைக்காக பெங்களூரு வந்தடைந்தார்.
டில்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னர் அலுவலகத்துக்குள் 9 நாள் தர்ணா போராட்டம் நடத்திய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,
கவர்னரின் அறிவுறுத்தலின்படி கடந்த 19-ம் தேதி போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
போராட்டத்தால் கெஜ்ரிவாலின் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு குறைந்துள்ளதால் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு வந்தடைந்துள்ளார்.
சில நாட்கள் பெங்களூருவில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என கூறப்படுகிறது.