fbpx
Others

பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர்ஸ்டாலின்…

பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர்Image

  • பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி,  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.விமான நிலைய புதிய முனையம், சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.இதையடுத்து ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமானநிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.மேலும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விமான நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்,   அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு,  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,  ஜி.கே வாசன், சென்னை மேயர் பிரியா,  உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து மாலை 3 மணி அளவில் விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 3.50 மணி அளவில் சென்னை ஐஎன்எஸ் அடையார் செல்லும் பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மாலை 4:40 மணிக்கு, விவேகானந்தர் இல்லம் வரும் பிரதமர், ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்திற்கு செல்லும் பிரதமர், 6. 30 மணியில் இருந்து இரவு 7:30 மணி வரை, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் முடிந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் 3 நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.முன்னதாக பிரதமர் மோடி சென்னை வருகையொட்டி மீனம்பாக்கம் விமான நிலையம் ஐந்து அடுக்கு பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close