fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ரேஷன் கடைகளில் ஆக.5 முதல் முகக்கவசம் வினியோகம்…! அமைச்சர் காமராஜ் தகவல்!

Aug. 5th people can get mask from ration shop

சென்னை:

ரேஷன் கடைகளில் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் முகக்கவசம் வினியோகம் செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை டிரஸ்ட்புரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். அதையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி ஆகஸ்டு 1, 3 மற்றும் 4-ந்தேதிகளில் இலவச முகக்கவசம் பெறுவதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும்.

மேலும் ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் உடன் இலவச முகக்கவசங்களையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close