நீடாமங்கலத்தில் இதயம் மற்றும் கண் பரிசோதனை முகாம்..

நீடாமங்கலம் செப்டம்பர் 1
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கான இலவச இதயம் மற்றும் கண் பரிசோதனை முகாம் இயக்கத் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் தலைமையில் நடத்தப்பட்டது கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் சிதம்பரம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர் இம் முகாமில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ குழு மருத்துவர்கள் ஆரோன் குருநாதன் ஆகியோர் தலைமையிலும் தஞ்சாவூர் மேக்சி விஷன் கண் மருத்துவமனை குழுவினர்கள் உள்ளிட்டோர் பரிசோதனை செய்தனர் இம் முகாமில் இதயம் தொடர்பாக 148 பேர் பரிசோதனை செய்யப்பட்டது அதில் 90 நபர்களுக்கு இசிஜி பரிசோதனைகளும் 72 நபர்களுக்கு எக்கோ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது மேலும் ரத்தத்தின் சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 107 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 92 நபர்களுக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதற்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்து கொண்டு பல்நோக்கு சேவை இயக்கத்தினரின் சேவைக்கு பாராட்டு தெரிவித்தனர் முன்னதாக செயலாளர் ஜெகதீஷ் பாபு அனைவரையும் வரவேற்றார். பல்நோக்கு சேவை இயக்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு முகாமினை சிறப்புடன் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி உரையாற்றினார்.