fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

உலக இளைஞர் திறன் தினம்…! இன்று உரையாற்றும் மோடி..! வெளியாகும் அறிவிப்புகள்!

PM modi speech today

டெல்லி:

உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற உள்ளார்.

ஸ்கில் இந்தியா (திறன் இந்தியா) திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பது அதன் இலக்கு.

அதற்காக கொண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆண்டு தோறும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர் திறன் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந் நிலையில், இத்தினத்தை முன்னிட்டும், திறன் இந்தியா திட்டம் தொடங்கியதன் 5-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டும் பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் இன்று உரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close