இந்தியாவில் கொரோனாவின் கோர முகம்…! 24 மணி நேரத்தில் 312 பேர் பலி!
312 Corona dead in india

டெல்லி:
இந்தியாவில் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 312 பேர் பலியாக, பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்து உள்ளது.
உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் 91 லட்சத்து 85 ஆயிரத்து 974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 4 லட்சத்து 74ஆயிரத்து 257 பேர் பலியாகினர் .
மேலும் 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,933 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பாதிப்பு மொத்தம் 440,215 ஆக உயர்ந்துள்ளது.
24 மணி நேரத்தில் கொரோனாவால் 312 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 14,011 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். .இதுவரை 2,48,190 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 4 வாரங்களாக இந்தியாவில் கொரோனா பரிசோதனை நடத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மே 24 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.37 சதவீதம் என்று இருந்தது. ஜூன் 21ம் தேதியுடன் அது 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது.
















