சீனாவுக்கு பதிலடி கொடுக்க விமானப்படைகள் தயார்..!
Air force chief RKS Bhadoria gives big statement over India-China dispute

ஐதராபாத்:
சீனாவுக்கு பதிலடி தர விமானப்படை தயார் என இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறி உள்ளார்.
ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நடைபெற்றது.
அதில் இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா பேசியதாவது:
அமைதியைக் காக்க நாடு எப்போதும் பாடுபடும். கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்களின் தியாகம் வீணாகாது.
சவாலான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட மகத்தான நடவடிக்கைகள், நாட்டின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளன.
எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க, தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளோம்.
கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம்.
சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லா நேரங்களிலும் தயாராக விழிப்புடனும் இருக்க படைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது.
எல்லை பிரச்சினை தற்போதைய நிலைமையில் அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.
















