fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

வரும் மே 31 ஊரடங்கு முடிவுக்கு வரும் சாத்தியமில்லை;உத்தவ் தாக்ரே!

மகாராஷ்டிரா;

வரும் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா.

அங்கு இதுவரை பாதித்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்தைக்கடந்துள்ளது.

இதில் 33,786 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்..

இந்நிலையில் தான் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்திரிக்கையாளர்களுடன்  பேசியபோது கூறியதாவது;

“மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிந்துவிடும்  என்று உறுதியாக  கூறிவிட முடியாது.

நாம் எப்படி முன்நோக்கி நகர்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். வைரஸ் பெருக்கம் இருக்கும் என்பதால் வரவிருக்கும் காலம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நாங்கள் எப்போதுமே உங்களுடன் துணை நிற்போம் என்பதை மருத்துவத் துறையினருக்கு உறுதிப்படக்கூறுகிறேன்.

இன்று காலை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியிடம் பேசினேன்.

அப்போது உள்நாட்டு விமான சேவைக்குத் தயாராவதற்குக் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளேன்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தற்போது மிகவும் கடினமானதாக இருக்கும்.

ஆனால், அச்சப்படத்தேவையில்லை. கூடுதல் மருத்துவ வசதிகளுடன் மாநில அரசு தயாராக உள்ளது.

மழைக் காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close