மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி நிதியுதவி..! பிரதமர் மோடி அறிவிப்பு
Modi announcement rs.1000 crore to west Bengal

கொல்கத்தா:
மேற்கு வங்கத்துக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடும் மழை, மின்னலுக்கு 72 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
விளைநிலங்கள் முற்றிலும் மூழ்கி உள்ளன. போக்குவரத்து இல்லை. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இந் நிலையில் அம்பன் சூப்பர் புயலின் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று காலை கொல்கத்தா சென்றார்.
கொல்கத்தா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மமதா பானர்ஜி வரவேற்றார். அதன்பின் அவருடன் சேர்ந்து, அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: அம்பன் புயலால் மேற்கு வங்காளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு முதல்கட்டமாக ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும். புயலால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என்றார்.















