
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் தவிர, கிராமப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் சலூன்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.(அது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.)
அதிலும் கையுறை அணிந்து முடி திருத்தவும், முகக்கவசங்கள் அணியவும், கடைகளில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.















