fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சரக்கு விக்கணும்… எல்லா கேசையும் தள்ளுபடி பண்ணுங்க..! இது டாஸ்மாக் அடம்

Tasmac plea to dismiss all cases

சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு டாஸ்மாக் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் நேற்று புதியதாக பாதிப்படைந்த 509 பேர்களில் சென்னையில் மட்டும் 380 பேர் உள்ளனர். இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. 2 நாட்களில் திறக்கப்பட்ட கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

டாஸ்மாக் திறக்கப்படகூடாது என பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந் நிலையில் மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளோம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு டாஸ்மாக் பதிலளித்துள்ளது. அதோடு, மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close