fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

இது டாஸ்மாக் டுவிஸ்ட்…! வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்

Tasmac case is in 3 judge member panel

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் முதலில் நிபந்தனையின் பேரில் விற்பனைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் அந்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து, ஊரடங்கு முடியும் வரை தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகின்றன.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற பதிவாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், டாஸ்மாக் வழக்கை 2 நீதிபதிகள் அமர்வுக்கு பதில் 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் ஆகியோர் அமர்வில் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close