fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

பிரபல விமான நிலைய ஊழியர்களுக்கு கொரோனா…! அப்புறம்.. ஆபீஸ் குளோஸ்…!

2 Corona cases in delhi air india office

டெல்லி: ஏர் இந்தியா அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா ஏற்பட அதன் தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி டெல்லியில் மொத்தம் 7639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 86 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகத்தில் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது.

கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. 2 நாட்களுக்கு அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள். ஏர் இந்தியா தமது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதால், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்வதற்காக அலுவலகம் மூடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close