RETamil Newsதமிழ்நாடு
GO கொரோனா… NO கொரோனா…! பச்சை மண்டலத்தில் நுழைந்த பனியன் சிட்டி…!
Tirupur became corona green zone

திருப்பூர்: கொரோனாவால் கடும் பாதிப்பில் சிக்கி இருந்த திருப்பூர் மாவட்டம் பச்சை மண்டலமாகி இருக்கிறது.
தமிழகத்தின் பனியன் நகரமான திருப்பூர் கொரோனா வைரஸ் தொற்றால் சிக்குண்டு தவித்தது. கொரோனா நோயாளிகள் அதிரடியாக 100ஐ தாண்ட மாவட்ட நிர்வாகம் அதிர்ந்து போனது.
அதை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஊரடங்கு கெடுபிடிகள் அதிகரித்தன. ஒரு கட்டத்தில் அந்த மாவட்டத்தில் மட்டும் 114 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 112 பேர் ஏற்கெனவே சிகிச்சை முடிந்து குணம் பெற்று விட்டனர்.
இந்நிலையில், பாக்கி இருந்த 2 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து திருப்பூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி, பச்சை மண்டலமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.















