fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

ஐ’ம் ஆல்ரைட்…! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா…!

Amit sha tweets about rumours

டெல்லி: தமது உடல் நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்று உள்துறை அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல் நலம் குறித்து சில தினங்களாக சமூக வலைத்தளங்களில்  ஏராளமான வதந்திகள் பரவின. இந் நிலையில், அமித்ஷா டுவிட்டரில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது: உலக பெருந்தொற்றான கொரோனாவுக்கு எதிராக நமது நாடு போராடி வருகிறது. நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதால், நானும் மிகவும் பரபரப்பாக இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.

இது (வதந்திகள்) போன்றவைகளுக்கு நான் கவனம் கொடுப்பதில்லை. நேற்று இரவு எனது கவனத்திற்கு இவை வந்த போது, வதந்தி பரப்புவர்கள் தங்களின் கற்பனைகளால் சந்தோஷமாக இருக்கட்டும் என்று நான் கருதினேன்.

ஆகையால் நான் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், கடந்த இரு தினங்களாக எனது  கட்சி தொண்டர்களும், நலம் விரும்பிகளும் மிகுந்த கவலை கொண்டனர்.

அவர்களின் வருத்தத்தை என்னால் புறக்கணிக்க முடியாது. எனவே, நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close