fbpx
RETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

டாஸ்மாக் மூடலுக்கு எதிரான தீர்ப்பு…! சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

Tn government appealed in apex court over tasmac issue

டெல்லி: ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கின் போது திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரி பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியாக அமல்படுத்தப்படவில்லை.

விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை. எனவே, ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்கலாம்.

அதன் மூலம் வீடுகளுக்கு மது பாட்டில்களை டெலிவரி செய்யலாம் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கை வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தது. நீதி மன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் செய்துள்ள மனு தாக்கலில் கூறப்பட்டு உள்ளதாவது:

உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளை அமல்படுத்தி மது விற்கப்பட்டது. ஒரு சில இடங்களில் விதிமீறல்களை அமல்படுத்தி ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல.

பல மாநிலங்களில் ஊரடங்கின்போது மதுவிற்பனை நடக்கும் போது தமிழகத்தில் விற்கக் கூடாது என்று சொல்லவது தவறானது. எனவே மதுபானக்கடைகளை திறக்க அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close