RETrending Nowஉலகம்
பிஏவுக்கு கொரோனா..! டிரம்புக்கும் திடீர் பரிசோதனை…! என்னாச்சு ரிசல்ட்?
Trump assistant affected by corona
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை வெள்ளை மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
அந்த அறிவிப்பில் ராணுவ உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதிபர், துணை அதிபர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அவர்களுக்கு, கொரோனா தொற்று இல்லை. ஆரோக்கியமாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரம் என்பது நினைவிருக்கலாம்.