Others

தொகுதி மறுவரையறை மசோதாக்கு ஆதரவு…!

Latest Tamil Newsதேசிய மற்றும் தமிழக அரசிலியல் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, ‘இண்டி’ கூட்டணி முன் இருந்ததை காட்டிலும் வலு இழந்துள்ளது. அந்த கூட்டணியில் இருந்த திமுக வெளியேறி உள்ளது. அதே கூட்டணியில் இருந்தாலும், சரத் பவாரின்தேசியவாதகாங்கிரஸ்,மசோதாவைஆதரிப்பதாக அறிவித்துள்ளது. ஆந்திராவின் ஜெகன் ரெட்டி கட்சியும் மசோதாவுக்கு ஆதரவு அறிவித்துள்ளது.இதனால் மசோதா நிறைவேற தேவையான ‘மேஜிக்’ எண்ணை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பார்லி நிலவரம் மொத்த எண்ணிக்கை 543 காலியிடம் 3 தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற தேவையான ஆதரவு – 360 பேர் தேஜ கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் எம்பி.,க்களுடன் திமுக 22 பேர், சரத் பவார் கட்சி 8 பேர், ஜெகன் ரெட்டி கட்சியினர் 4 பேரையும் சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 358 ஆகி விடுகிறது.எம்.பி.,க்களில் சிலர் அவைக்கு வராமல் இருக்கவும், சிலர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தேவையான ஆதரவு எண்ணிக்கை 360 என்ற நிலையில் இருந்து 358க்கு கீழே குறையும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதனால் இந்த முறை மசோதா உறுதியாக நிறைவேறும் வாய்ப்புள்ளது என்கின்றனர், அரசியல் கட்சியினர்.அனைத்து மாநிலங்களிலும், தொகுதிகளை 50 சதவீதம் வரை உயர்த்துவதற்கான விதியை,மசோதாவின் உரையில் சேர்க்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதே, இக்கட்சிகளின்மனமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான நிபந்தனையை பரிசீலிக்க தயாராக இருப்பதாக, இந்த இரு கட்சிகளுமே வெளிப்படையாக கூறிவிட்டதால், மசோதாநிறைவேற்றம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. நாளை மறுதினம் நடக்கும் சிறப்பு அமர்வில் கட்டாயம் கலந்துகொள்ளுமாறு, தங்கள் கட்சியின் எட்டு Latest Tamil Newsஎம்.பி.,க்களுக்கும், சரத் பவாரின் தேசியவாதகாங்கிரஸ்உத்தரவுபிறப்பித்துள்ளது.இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் மோடி அமைச்சர்களுடன் இன்று மதியம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் அனைத்து அமைச்சர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் பார்லியில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதம் நடத்தப்பட இருக்கிறதுஅதேபோல, காங்கிரஸ் எம்பிக்களுடன் அக்கட்சியின் பார்லி குழு தலைவர் சோனியாவும் இன்று முக்கிய சந்திப்பு நடத்துகிறார். டில்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் பார்லி சிறப்பு அமர்விற்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே, கடந்த அமர்வில் எதிர்க்கட்சிகளின் அமளியால் எந்த அலுவல் பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close