fbpx
RETrending Nowஇந்தியா

பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்..! வருகிறது புதிய நடைமுறை

NCERT new announcement about school opening

டெல்லி: அனைத்து பள்ளிகளை ஷிப்ட் முறையில் திறக்கலாம் என்று என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கல்லூரிகள் ஆகஸ்ட்1 முதல் திறக்கலாம் என்று பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி பரிந்துரைத்துள்ளது. இந் நிலையில் பள்ளிகளையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் திறக்கலாம் என்று என்சிஇஆர்டி பரிந்துரைத்துள்ளது.

50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படவும்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் யூ டியூப் மூலம் வகுப்புகளை நடத்தவும் பரிந்துரை செய்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close