fbpx
RETamil Newsஇந்தியா

வெளிநாட்டு தமிழர்களை மீட்குமா தமிழக அரசு

உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய செய்திகள்  பார்த்தும், கேட்டும் வருகிறோம்.

தாயகத்தில் இருந்து பிழைக்க வெளிநாட்டிற்குச் சென்ற தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள்?

எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்? என்றெல்லாம் இந்த அரசு கவலை கொள்வது  இல்லை.

அவர்களைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை! நேற்று மஸ்கட்டில் இருந்து ஒரு குரல் ஒலித்தது.


அரபு நாடுகளில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சென்றுள்ளனர். அவர்கள் வாழ்க்கை பற்றியெல்லாம்  ஒரு சிந்தனையும் தமிழக அரசுக்கு கிடையாது.

பக்கத்து மாநிலமான கேரளாவில் முதலமைச்சர்…  அந்த மாநிலத்து பலர் வெளிநாடு சென்று வேலை புரிபவர்களை நம் மாநிலத்திற்கு கொண்டுவர வேண்டும்.

அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் அனைத்து பொறுப்புகளையும் கேரள அரசு ஏற்றுக்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

அதனால் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்துள்ளது கேரளா அரசு அண்டை நாடுகளு‌க்கு.
ஆனால் தமிழர்களுக்கான தமிழக அரசின் குரல் கேட்கவில்லை வெளிநாட்டில் பணி புரிவோர் அனைவரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்றுதான் அனைவரும் கூறுகிறோம்.

ஆனால் அவர்கள் படும் துன்பம் குடும்பத்தை விட்டு, உறவுகளை விட்டு, கொட்டும் பணியில், சூழலில் பணிபுரிவோர் பற்றி யாருக்கு தெரியும்? எத்தனை பேருக்கு தெரியும்.?

வெளிநாட்டில் உள்ள மக்களை நான்கு விதமாகப் பிரிக்கலாம்

1. அங்கேயே படித்து வேறுவழியின்றி அங்கேயே வேலைக்கு போய்விடுவார்கள்.

2.வேலைக்காக சென்றவர்கள், வேலை தேடி சென்றவர்கள் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அங்கேயே உணவு, வேலை இன்றி தவிக்கும் மக்கள்.

3.சுற்றுலா சென்ற மக்கள்.

4.மாணவர்கள் படிக்க சென்றவர்கள் என நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

கிர்கிஸ்தானில்  படிக்க சென்ற தமிழக மக்கள் அங்கு உள்ள கல்வி நிலையங்கள்  அனைத்தும் மூடப்பட்டதால் எங்களால் படிக்கவும் முடியவில்லை, வாழவும் முடியவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர், செய்திகள் அனுப்புகின்றன.

தென்னாப்பிரிக்காவில்  வேலை செய்ய சென்ற தமிழக மக்கள் அங்கு உள்ள கம்பெனி, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் எங்களால் அங்கு வாழ முடியவில்லை.

எங்களை எங்கள் நாட்டிற்கு அனுப்புங்கள் என்று அந்நாட்டு அரசிடம் கேட்கும் போது எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை தனி விமானம் வைத்து உங்களை உங்கள் நாட்டிற்கு அழைத்து செல்ல உங்கள் அரசுக்கு செய்தி அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள்.

அரபு நாடுகளில் உள்ள தமிழக பெண்கள், கர்ப்பிணி பெண்கள் தாயகம் திரும்ப விரும்புகிறார்கள் ஆனால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஊடரங்கு போடப்பட்ட நிலையில் அவர்களால் வரமுடியாது.

அரபு நாடுகளில் வாழ்வோர் பணிபுரிவோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கான முடிவுகளை தமிழக அரசு  எடுக்குமா?  என்றால் கேள்விக்கிடமாக தான் உள்ளது.

நமது நாட்டு அரசுக்கு தமிழ்மக்கள் மீது அக்கறை இல்லையா??

பக்கத்து மாநில அரசு அவர்கள் மக்களை காப்பாற்ற  போராடும் போராட்டம் தமிழக அரசுக்கு இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது..

தமிழக அரசும் மத்திய அரசும் சேர்ந்து தான் இதை கவனிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டால் நாங்கள் தமிழர்கள் இல்லை?
ஓட்டுக்கு மட்டும் நாங்கள் தமிழர்கள்? என்ற கேள்வியும் எழுகிறது.

அனைத்து நாடுகளில் இருந்து வரும் தமிழக குரல்களுக்கு நம்பிக்கையும் வலிமையும் நாம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

முன்னோர்கள் சொன்ன கூற்று இன்று, வாழ்வோம், ஒற்றுமையாக இருப்போம் உதவி செய்வோம் என்றெல்லாம் மாறிவிட்டது… உள்ளூரில் உழைத்து வாழ வேண்டும். கூடி வாழக் கூடாது. தனித்துதான் வாழவேண்டும் வாழ்க்கையின் போக்கு, உலகின் போக்கை இவ்வாறு கொரோனா மாற்றிவிட்டது.

தமிழக அரசு இந்த கொரோனா சிகிச்சைக்காக பரிசோதனை கருவிகளை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளது,.

எவ்வளவு பணம் கொடுத்து இறக்குமதி செய்தது என்றால் ஒரு பரிசோதனைக் கருவி 600 ரூபாய் ஆனால் 337 ரூபாய் கொடுத்து ஒரு பரிசோதனை கருவி சட்டீஸ்கர் மாநிலம் விலைக்கு வாங்கியுள்ளது,

நமக்குத் தேவையான கருவி 5 லட்சம் ஆனால் வாங்கியது 24000 தற்போது 12000 வந்துள்ளது என்ற செய்தி வந்திருக்கிறது இந்த 36 ஆயிரம் கருவிகள் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது.

நாம் நிவாரண உதவியாக கேட்ட பணம் 50,00 கோடி உதவி தொகை கேட்டால் 510 கோடி தான் தமிழகத்திற்கு நிவாரணமாக வந்துள்ளது,.

ஐம்பதாயிரம் கருவிகள் கேட்டால் 36,000 கருவிகள் மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ளது.

எதற்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள் என்ற கேள்விக்கு?? பதில் யாரிடமிருந்தும் வரவில்லை.

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசு 337 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பரிசோதனை கருவியை, நாம் ஏன் 600 ரூபாய் கொடுத்து வாங்கினோம்? என்ற கேள்வி  அமைச்சர் கேட்கப்பட்டது. பதில் கூறவில்லை  இதை பற்றி மருத்துவ துறையில் உள்ள உமாநாத் இதற்கு பதில் சொல்வார், அவருக்கு தான் தெரியும் என்று பதிலை மலுப்பி விட்டார் அமைச்சர்.

உமாநாத்  யிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது ஆனால் பதில் தொடர்பு இல்லாமல் வந்தது மூன்று முறை கேட்ட பின்புதான் 337 ரூபாய் கொடுத்து சட்டீஸ்கர்  மாநிலம் பரிசோதனை கருவியை சிகிச்சைக்கு வாங்கியுள்ளது.
ஆனால் நம் தமிழக அரசு 600 ரூபாய் கூடுதலாக கொடுத்து  வாங்கியது ஏன்? என்ற கேள்விக்கு இது எல்லாம் மத்திய அரசு மூலம்வாங்கியது அவர்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று தெரிவித்தனர்.

நமக்கு தேவையான Rabit Test Kits 5 லட்சம் இதை ஒரு tester 600 ரூபாய் கொடுத்து வாங்கும் போது மக்கள் வரிப்பணம் எவ்வளவு போகும்?? என்று தெரியவில்லை.

சட்டீஸ்கரில் வெறும் மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் அவர்களுக்கு 75 ஆயிரம் சோதனைக் கருவி வாங்கியுள்ளனர். ஆனால் தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடிக்கு அதிகமாக உள்ளது. இதற்குக்கு இன்னும் பரிசோதனை கருவிகள் தேவை அதற்கு செலவு செய்யும் மக்கள் வரி பணம் தான்..

கொரோனா உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் மக்களின் வரிப்பணம் எங்கு யாருக்கு போகிறது என்று தெரியவில்லை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மக்கள் வரி பணத்தை மக்களுக்கே உதவுகிறோம் என்ற ஒரு கும்பல்கள் சுத்துகிறது..

கொரோனா வில் இருந்து தமிழகம் தப்பித்தாலும் இந்த அரசியல் சாக்கடையில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாது.
இந்நிலையில் தான் வெளிநாட்டு தமிழர்களை இந்த அரசு மீட்குமா? மக்கள் வரிப்பணத்தை சரியான விதமாக செலவு செய்யுமா? என்ற கேள்விக்கு எல்லாம் காத்து இருப்போம்..

விழித்துகொள்வோம் மக்களே..

?  V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close