
கொரோனா ஊரடங்கு உத்தரவையடுத்து அத்தியாவசிய பயணத்திற்காக இ-பாஸ் வழங்கும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசின் வழிமுறைகள் என்ன?
சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு
அனுமதி கடிதம் பெற மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, நேரில் அனுமதி கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு, ‘ஆன்லைன்’ மூலம், விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த வாரம் செயல்பாட்டுக்கு வந்தது.
இதையடுத்து திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்கு பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும். அப்படி பயணிக்கும் மக்களுக்கு அனுமதி வழங்க உள்ளது. அதை பெரும் வழிமுறைகளை பார்க்கலாம்.
கீழே லிங்கை க்ளிக் செய்துக்கொள்ளவும்.
இணைப்பை கிளிக் செய்து தங்களது தொலை பேசி எண்ணை உள்ளிடவும்.
உடனடியாக பதிவு செய்த எண்ணிற்கு ஓடிபி எண் வரும் இதை பதிவு செய்து உள்ளே நுழைய வேண்டும்
அதில் E-pass-க்கான விண்ணப்பம் தோன்றும். அதை பூர்த்தி செய்யவும்
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்பிக்க வேண்டும்
அலுவலர் தங்களது பரிந்துரையை பார்த்து ஆய்வு செய்வார்
இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலர் தங்களது பரிந்துரையை பார்த்து ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்து பின்பு பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வந்திருக்கும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது, இ – பாஸ் பெறுவதற்காக அடிப்படை காரணங்களை கூறி விண்ணப்பிக்க வேண்டும்
மாவட்ட நிர்வாகம் விண்ணப்பத்தை பரிசீலித்து, அனுமதி வழங்கி, ‘லிங்க்’கை மொபைல் போனுக்கு அனுப்பும். அதை, பொதுமக்கள் ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
இது எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் என்று தெரியவில்லை ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.















