இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து நிர்மலா சீதாராமன் அடடே விளக்கம்!!

சென்னையில் இன்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு 10 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய அட்டையை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை அந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பா.ஜ.னதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.ஆனால் விமானப்படை தரப்பில் எந்த ஒரு பலி எண்ணிக்கையும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் , ” இது ராணுவ நடவடிக்கை கிடையாது” தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்றும், பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்தியா நடவடிக்கை எடுக்க நேரிட்டது என்றும் அதனால் தான் தீவிரவாத முகாம் தகர்க்கப்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புவது குறித்து மருத்துவர்களும், விமானப்படை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.















