டிராபிக் போலீஸ் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் – லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டார் !

சென்னையில் உள்ள அம்பத்தூரில் டிராபிக் போலீஸ் ரவிச்சந்திரன் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் விதித்து அதை வாங்குவதுதான் போக்குவரத்து போலீசாரின் தலையாய கடமையாக உள்ளது. ஆனால் அதற்கு மாறாக சில போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதற்கு பதிலாக அவர்களிடம் லஞ்சம் வாங்குவதை தொடங்கியுள்ளனர்.
இந்த வகையில் தான் சென்னையில் உள்ள அம்பத்தூரில் போக்குவரத்து ஆய்வாளர் பைக்கில் வந்த ஒருவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். இந்த சம்பவத்தை மற்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து இந்த செயலை செய்த டிராபிக் போலீஸ் ரவிச்சந்திரன் பணியுடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர்மீது துறைவாரியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்னதாக தேனாம்பேட்டை பகுதியில் வாகனத்தில் சென்ற கான்ஸ்டபிளை கீழே தள்ளிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் அதனால் அவர் பனியுடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போதுதான் அவர் அம்பத்தூர் பகுதியில் பனியுடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.















