RETamil Newsஅரசியல்இந்தியா
ஹிட்லர் ஆட்சியை கொண்டு வருவதே மோடியின் திட்டம்:டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!!

புதுடெல்லி;
வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி நீடிக்கும் என்று அமித் ஷா பேசியதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,
பாஜகவின் ஆட்சி முறை, சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிபோல இருப்பதாக தெரிவித்தார்.
ஜெர்மனியில் ஹிட்லர் கொடுங்கோல் ஆட்சி செய்ததைப் போல, இங்கும் தேர்தல் முறையை ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் திட்டம் என்று கூறியுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்,
பாஜகவை வீழ்த்த வீடுவீடாக சென்று ஆதரவை பெற வேண்டும் என்றும் கட்சியினருக்கு அறிவுறுத்தி கூறியுள்ளார்.















