fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

இரண்டு சிறுமிகள் பலாத்கார வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் -கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த இரு சிறுமிகளையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமிகள் இருவரையும் திட்டக்குடி பகுதியில் வசிக்கும் பாரதியார் அருள்தாஸ் ,அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி , பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரியவந்துள்ளது.

இதே போல் திட்டக்குடியை சேர்ந்த தனலட்சுமி, மேகலா, நெல்லிக்குப்பம் ராதா, பாத்திமா, சேலம் அன்பு ஆகியோரால் இந்த சிறுமிகள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அதிரடி தேடுதல் மற்றும் கைது வேட்டையிஅம ல் இறங்கியது.30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் இரண்டு பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடலூர் நீதிமன்றம் 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. வறுமை நிலையில் உள்ள ஏழை வீட்டு சிறுமிகளை இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது மிகவும் வெட்கப்படக்கூடிய செயல் என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த 16 குற்றவாளிகளில் 8 பேர் பெண்கள் என்றும் , 8 பேர் ஆண்களென்றும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களின் தண்டனை வெவரம் பற்றி வரும் திங்கட்கிழமை தெரிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close