RETamil News
15 ஆயிரம் கர்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த 98 வயது நரசம்மா காலமானார்

கர்நாடகா:
பெங்களூரில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 98 வயது நிரம்பிய சுலகிட்டி நரசம்மா.இவர் தான் இருக்கும் இந்த கிராமத்தில் இதுவரை 15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
கர்ப்பகால சேவைகளை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக செய்த இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தும்கூர் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
பின் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த இவருக்கு பத்ம ஸ்ரீ விருதினை கொடுத்து கவுரவப்படுத்தினார்.
கடந்த 1920-ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவு ஏற்பட்ட இவர் இன்று காலமானார்.















