33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது; மத்திய அரசு முடிவு

பிரதமர் மோடி மராட்டிய மாநிலத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜி.எஸ்.டி வரி விதிப்பு தற்போது விரிவான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆடம்பர பொருட்கள் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் 28% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இதை மேலும் எளிமையாக்கும் வகையில் , 99% பொருட்கள் 18% ஜி.எஸ்.டி வரி வரம்பிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு என்று கூறியிருந்தார்.
தற்போது அதை நிறைவேற்றும் வகையில் 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது என இதற்கான கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் 7 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி 28%-ல் இருந்து 18%-ஆக குறைக்க ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 26 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி , 12%-ல் இருந்து 5%-ஆக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சிமெண்ட் , ஆட்டோமொபைல்ஸ் ஆகியவை 28%-ல் இருந்து 18%-வரையிலான ஜி.எஸ்.டி வரம்பிற்குள் வரும் என்று கருதப்படுகிறது.
மேலும் டிஜிட்டல் கேமரா , டிஷ் வாஷர் , ஏ.சி , டிவி ஆகிய மின்சார சாதனங்களுக்கான விலை குறையும் வகையில் வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















