Others

டாக்டர் பக்தவத்சலம்—கோவை மக்களின் தாழ்மையான கோரிக்கை..

உயிர் காக்கும் மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்கள்!தமிழக முதல்வர் விஜய் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா பேச்சு வார்த்தைகளை  முன்மொழிந்தார் – எகனாமிக் டைம்ஸ்தமிழக முதல்வர் விஜய் தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். பொதுமக்களுக்கு என்ன தேவையோ அதை அவர் செய்து தருகிறார். தற்போதைய புரட்சித்தலைவராகவிஜயைநான்கருதுகிறேன். அவர் அவதார புருஷராக வந்துள்ளார். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், மதுக்கடைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். லஞ்சத்தை அடியோடு ஒழிக்க முயற்சி செய்து வருகிறார்.கோவையின் தேவைகள் குறித்து எடுத்துக்கூறக்கூடிய தலைவர்கள் யாரும் இங்கு இல்லை. கோவை, தொழிலாளர்கள், முதலாளிகள், தொழில் முனைவோர்கள், தொழில் நிறுவனங்களால் தானாக உருவானது. கோவையில், பல லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளித்துறையினர், மருத்துவமனைகளால் கோவை கட்டமைக்கப்பட்டது. ஆனால், கோவைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்படவில்லை.கோவையில் வாகனங்கள் எண்ணிக்கை, 10 மடங்கு அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கோவைக்கு தேவையான ரிங் ரோடு இல்லை. தேவையான ரோடுகள், பார்க்கிங் வசதிகள் இல்லை. கோவை யாரும் கவனிக்கப்படாத நகரமாகிவிட்டது.கோவைக்கு வரும் முதல்வருக்கு மூன்று கோரிக்கைகள் வைக்கிறேன். ரிங் ரோடு அமைக்க வேண்டும். கோவையின் மக்கள் தொகை தற்போது, 20 லட்சம். அடுத்த சில ஆண்டுகளில், 40 லட்சமாகும்.ஏழை மக்களால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாது. அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மதுரையை போல் கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். மத்திய அரசு, நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களை இங்கு கொண்டு வரும். அதன் மூலம் சிறந்த மருத்துவம் கிடைக்கும்.பல ஆண்டுகளுக்கு பின் ஜி.டி., மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது போதாது. பலமேம்பாலங்களின் தேவை உள்ளது. அதை ஏற்படுத்த வேண்டும். மருத்துவச் சுற்றுலா வளர்ந்து வரும் நிலையில் பல்வேறு நாட்டினரும் இங்கு வருகின்றனர்.அவர்களின் தேவைக்காக விமானநிலையத்தை விரைந்து விரிவுபடுத்த வேண்டும். கோவையில் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு கோவைக்கு அருகில் துணை நகரம் ஏற்படுத்த வேண்டும். பிரதமருடன் நெருக்கம் காட்டி வரும் தமிழக முதல்வர் கோவையின் தேவைகளை கேட்டு பெற வேண்டும். இது கோவை மக்களின் தாழ்மையான கோரிக்கை. இவ்வாறு கே.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம்  கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close