Others
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி— சிறப்பு செய்தி
தேனி மாவட்டத்தில் புதிய ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய *திரு.வ.சிவ கிருஷ்ணமூர்த்தி இ.ஆ.ப.,* அவர்களை தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சேர்மன் மருத்துவர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், வைஸ் சேர்மன் திரு.வி. மகாராஜன், மாவட்ட செயலாளர் திரு.க.சுருளிவேல், பொருளாளர் திரு.எஸ்.முகமது ஷேக் இப்ராஹிம், மேலாண்மை குழு உறுப்பினர்கள் திரு.காமராஜ், திரு. சிதம்பரநாதன், திருமதி. சிறுமலர் மற்றும் அலுவலக உதவியாளர் திரு.செந்தில்குமார் ஆகியோர் இன்று (16.10.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்த தருணங்கள்.
நன்றி. ஆண்டிப்பட்டி செய்தியாளர் வேல்முருகன்

