ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா…!
Chengalpattu corona cases list

சென்னை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,379 ஆக உயர்ந்து உள்ளது.
1597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
1640 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று உயிரிழந்த 3 பேருடன் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு வந்து சென்ற மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 80 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே தொற்று பாதித்தவர்களுடன் குடும்பத்தினர், உறவினர்கள் 25 பேரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
















