ஈரோடு–இலவச வீட்டு மனை பட்டா தராததால்….?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணா நகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக் கான மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவ சாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர்.இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, சத்தி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். பல ஆண்டுகளாகியும் வழங்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர், தொப்பம்பாளையம், கணபதி நகர்அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க, பொருட்களுடன் நேற்று காலை திரண்டனர். தகவலறிந்து பவானிசாகர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானம் அடையாமல் தங்களுக்கு பிடித்த இடத்தை பிடித்து, குச்சிகளை நடும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சந்தி டி.எஸ்.பி., சரவணன், சந்தி தாசில்தார் சக்திவேல் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.