fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

கொரோனா பரவல் எதிரொலி..! பொதுத்தேர்தல் தள்ளிவைக்கப்படுவதாக நியூசி. பிரதமர் அறிவிப்பு!

Newzealand general election postponed

வெலிங்டன்:

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பரவியதால் பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செப்டம்பர் மாதம் 19ம் தேதி நியூசிலாந்தின் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி வரையில் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலம் போதுமானதாக இல்லை என எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் தற்போது போதுமான காலம் உள்ளதாக நியூசிலாந்து அவர் கூறியுள்ளார். ஆனால், சுகாதார முறைமைகளை பின்பற்றி பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நியூசிலாந்தின் முக்கிய நகரான ஒக்லாண்டில் புதிதாக கொரோனா தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அங்கு ஊரடங்கு நிலை 12 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் புதிதாக 49 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மாதங்களுககு பின்னர் நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா அச்சம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close