fbpx
GeneralRETamil Newsஉலகம்

டிக் டாக் செயலி அமெரிக்க உரிமையை வாங்கும் டிவிட்டர்…! முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு!

Tiktok sale in America, twitter planning

வாஷிங்டன்:

டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு டிவிட்டர் நிறுவனம் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பு காரணமாக டிக் டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யயும் முனைப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளார். இதன் காரணமாக டிக்டாக் நிறுவன அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன.

டிக்டாக் ரேஸில் ட்விட்டர் நிறுவனம் தற்போது முன்னணியில் இருக்கிறதாம். இது சம்பந்தமாக தற்போது ட்விட்டர், டிக் டாக் நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஆனால், இதற்கு முன்னரே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக் டாக் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் உடன் ஒப்பிடும்போது போட்டியாளர் ட்விட்டர் நிறுவனம் கொஞ்சம் சிறியது. ஆதலால், ட்விட்டர் நிறுவனம் டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு தனியார் முதலீட்டாளர்கள் தேவைப்படுவர் என வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close