fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

உலகளவில் 1.82 கோடி பேருக்கு கொரோனா தொற்று…! தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!

World corona cases 1.82 crores

ஜெனீவா:

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவலால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளது. ஆகையால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனால், மனித குலத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே கொரோனா வைரஸ் விளங்கி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,226,598-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  6,92,420 ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  11,439,262- ஆக உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close