fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்..! முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றி!

Srilanka election results announced

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி மொத்தம் 145 இடங்களில் வென்றுள்ளது.

இலங்கையில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.  கொரோனா தாக்குதலையும் மீறி பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜன பெரமுன கட்சி, சஜித் பிரேமதாஸவின் மக்கள் சக்தி கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சம்பந்தன் அவர்களின் தமிழரசுக் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிட்டதால் 4 முனை போட்டி ஏற்பட்டது.

இந் நிலையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல்கட்டத்தில் இருந்தே தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த ராஜபக்சே கட்சி வாக்கு எண்ணிக்கை முடிவில் 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களில் வென்றுள்ளது. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close