fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

H1B விசா தடைகளில் புதிய தளர்வுகள்…! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

USA announcement over H1B visa

வாஷிங்டன்:

H1B விசா தடைகளில் புதிய தளர்வுகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம்.

இந்த விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று வருகின்றனர். ஆனால், டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “எச்1 பி”விசாவில் கட்டுப்பாடுகளை விதித்தார்.

மேலும், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் H-1B விசாக்கள் தற்காலிகமாக  இந்த ஆண்டு இறுதி வரை தடை என்று டிரம்ப் கூறினார். இந் நிலையில் பணியாளர்களை மாற்றுவதற்கு முதலாளிகளை கட்டாயப்படுத்துவது நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம். ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் H1B விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம்(அதாவது அமெரிக்காவில் உள்ள அதே நிறுவனத்தில், அதே வேலைக்கு திரும்பினால் H-1B விசா வழங்கப்படும்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close