புதுக்கோட்டை அருகே சாலை விபத்து – ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி.

புதுக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே வேனும், கன்டைனர் லாரியும் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 10 உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 15 பேர் ராமேஸ்வர கோவிலுக்கு சென்று வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வேன் மீது எதிரே வந்த கண்டைனர் லாரி நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் வேன் டிரைவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமையுள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவஇடத்தில் விரைந்த மீட்பு படையினர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.















