சர்வதேச கப்பல் கட்டும் மையமாக தமிழ்நாடு விரைவில் மாறும் …!
தமிழ்நாட்டை சர்வதேச கப்பல் கட்டும் மையமாக மாற்ற ₹30,000 கோடி மதிப்பிலான இரண்டு மாபெரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 55,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறதுகொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் ₹15,000 கோடி முதலீட்டில் ஒரு உலகத் தரமான வர்த்தக கப்பல் கட்டும் தளத்தை நிறுவும். இதன் மூலம் முதல் கட்டமாக 10,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக). இதேபோல், மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனமும் ₹15,000 கோடியில் மற்றொரு சர்வதேச அளவிலான கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும். இதன் மூலம் 45,000-க்கும் அதிகமானவேலைவாய்ப்புகள் (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) உருவாகும். இது தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த TN Rising மாநாட்டில்தமிழ்நாடுமுதல்வர்மு.க.ஸ்டாலின்,மாநிலத்தில்கப்பல்கட்டுமானத்தைமேம்படுத்துவதற்காக ஒரு பிரத்யேக நிறுவனம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.இதையடுத்து இந்த மாததொடக்கத்தில்SIPCOTமற்றும்VoCதுறைமுகம்ஒரு
புரிந்துணர்வுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டன. இது, வரவிருக்கும் முதல் தமிழ்நாடு கடல்சார் போக்குவரத்து உற்பத்தி கொள்கை 2025-ஐ அடிப்படையாகக் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இதன் மூலம் மாநிலத்தில் கப்பல் கட்டுமான மேம்பாட்டிற்கான பணிகள் தொடங்கி உள்ளன.இதையடுத்து தற்போது தமிழக அரசு சார்பாக கப்பல் கட்டுமானத் துறையில் இரண்டு பிரம்மாண்டமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த புதிய பசுமை வழி வணிகக் கப்பல் தளங்களைநிறுவுவதற்காக ₹30,000 கோடி முதலீடு செய்யப்பட்டு, 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம், உலகளாவிய தரத்திலான வணிகக் கப்பல் தளத்தை அமைப்பதற்காக ₹15,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் முதல் கட்டமாக 4,000 நேரடி வேலைவாய்ப்புகளையும், 6,000 மறைமுக வேலைவாய்ப்புகளையும் சேர்த்து 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம், ₹15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் தளத்தை நிறுவ உள்ளது. இது 5,000 நேரடி வேலைவாய்ப்புகளையும், 40,000 மறைமுகவேலைவாய்ப்புகளையும் சேர்த்து 45,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். கடல்சார்துறையை மாற்றியமைக்கும் நிகழ்வில் கையெழுத்தான இந்த ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதில்ஒருமுக்கியபடியாகும். இந்த இரண்டு மாபெரும் திட்டங்களும் இணைந்து, தமிழ்நாடு கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் பணிகளை உலக அளவில் எடுத்து உள்ளது. கப்பல் கட்டும் துறையில் தமிழ்நாடு உலகின் மையமாக உருவெடுக்க வழி வகுக்கும், என்று குறிப்பிட்டு உள்ளார்