fbpx
Tamil Newsஉலகம்

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான் காரணம் ; பாகிஸ்தான் இதற்கு உத்தரவிடவில்லை – பர்வேஸ் முஷரப்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பினர் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை நிரப்பிய காரை வைத்து மோதி வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஆனால் இவ்வாறு நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பின் தலைவரான மசூத் அசாரே தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷரப் குற்றம் சாட்டியுள்ளார். மசூத் அசாரேயுன் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரும் இந்த கோரிக்கை நியாயமானதுதான் என்று கூறிய முஷாரப் , தன்னையும் அவன் கொல்ல திட்டம் திட்டியதாக நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு செய்யப்பட்ட இந்த தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தாலும் , இந்த தாக்குதலுக்கு இம்ரான் கான் உத்தரவிடவில்லை என்று பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close