fbpx
Others

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம்–சிறப்பு செய்தி

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் சார்பில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பிரட் பால் வழங்கும் நிகழ்ச்சி
விசிக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ப்பு ஆற்காடு செப்:- 28 தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம், ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமார் 100 உள்நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பால் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த மனிதாபிமான நிகழ்வு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒரு சிறிய ஆறுதல் அளிக்கும்வகையில்ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பாரூக்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ். ஆனந்தன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சுனில் குமார், பொருளாளர் வெங்கடேசன்,திமிரிநமரைபி.பெருமாள்மற்றும்மாவட்டஒருங்கிணைப்பாளர்தாமோதரன்,ஆகியோர்நிகழ்ச்சியைஒருங்கிணைத்தனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் பிரபு (எ) பிரபாகரன் மற்றும் பாமக வன்னியர் சங்கம் மாவட்டச் செயலாளர் லட்சுமணன், மருத்துவர் அஸ்வினி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பால் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வு குறித்து மாவட்ட செயலாளர் ஆனந்தன் கூறுகையில், “சங்கத்தின் சார்பில் இதுபோன்ற மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒரு சிறிய ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார்.இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சங்கத்தின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுதெரிவித்தனர்.மேலும், இந்த நிகழ்வின் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு நம்பிக்கை மற்றும் ஆதரவு கிடைத்தது.இது போன்ற மனிதாபிமான செயல்கள் சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.இதில் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Related Articles

Back to top button
Close
Close